சொந்த மகளாக இருந்தாலும் சம்பள விஷயத்தில் கரராக இருந்தாரா ரஜினி.? லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்..

lal salaam
lal salaam

Rajinikanth Salary: ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு நீண்ட கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளை சமீபத்தில் ரஜினிகாந்த் முடிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குவதை தொடர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக  நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கேமியோ ரோலில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். முன்பு ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் லால் சலாம் படத்தின் போஸ்டரை பகிர்ந்தார் அதில் மொய்தீன் பாய், வெள்ளம் என்று கூறியிருந்தார். அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி குர்தா மற்றும் சிவப்பு தொப்பி அணிந்து இருந்ததால் முஸ்லிமாக நடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் டிசம்பரில் ஏ.ஆர் ரகுமான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்திற்காக ஹார்மோனியம் வாசிக்கும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.

அதில் மும்பையில் லால் சலாம் படத்திற்காக மிகவும் நம்பிக்கை கூறிய பெண் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதியில் லால் சலாம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றினை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.