தளபதி விஜய் நெல்சன் உடன் இணைந்து தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக போஸ்ட் புரமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளது குறிப்பாக பல்வேறு பேட்டிகள் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து பல அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது இதனால் அனைத்து இடங்களிலும் படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளன மேலும் இதன் மூலமாக பீஸ்ட் திரைப்படம் சுமார் 150 கோடிக்கு மேல் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தில் நடித்தவர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளனர் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது அதன்படி இயக்குனர் நெல்சன் 8 கோடி சம்பளம் வாங்கி உள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
முக்கியமாக தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தளபதி விஜய் இந்த படத்திற்காக சுமார் 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.