நடிகர் சூர்யா ROLEX கதாபாத்திரத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த தகவல்

vikram movie
vikram movie

சினிமாவுலகில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் அவரைப் பற்றி மட்டுமே அந்த படத்தில் பேசவேண்டும் என்பதற்காக மற்ற டாப் ஹீரோவை தனது படத்தில் நடிக்க வைக்க எந்த ஒரு நடிகரும் விரும்ப மாட்டார் ஆனால் அண்மைகாலமாக அது உடைத்து எறியப்பட்டுள்ளது. ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் அதே படத்தில் இன்னொரு ஹீரோவை அந்த படத்தில் இணைந்தால் அந்தப் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும்.

அந்த காரணத்தினால் அண்மை காலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து மற்ற ஹீரோக்கள் இணைந்து நடித்து அசத்துகின்றனர். அதேபோல்தான் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்  படத்தில் கமலுக்கு நிகராக நல்ல மார்க்கெட்டை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்கள் நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படமும் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திவருகிறது உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது. வருகின்ற நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட இந்த படத்தில் நடித்தவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்.

குறிப்பாக பத்து நிமிஷத்தில் சூர்யா வந்து போனாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இதைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது அதே போல சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் பின்னி பெடல் எடுத்து உள்ளார் நிச்சயம்.ஒரே படத்தில் 3 நடிகர்கள் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளதால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்ததற்காக சம்பளம் வாங்கவில்லை என தெரியவருகிறது சூர்யாவின் குரு கமல் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த படத்தில் காசு வாங்காமல் சும்மாவாக  வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.