தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். மேலும் விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். இது வரை தமிழில் 65 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் ஆரம்பத்தில் அவரது சில படங்கள் தோல்வியை தழுவி உள்ளன. தற்போது ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
கடைசியாக விஜய் பீஸ்ட் என்னும் படத்தை கொடுத்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை அள்ளியது. தற்போது தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையதளத்தில் கசிந்த வண்ணமே இருக்கின்றன. இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் சங்கீதா, சம்யுக்தா போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து விஜய் அவரது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி விஜய் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் பார்ப்பதற்கு எளிமையாக தான் இருப்பார். இவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அப்போதும் சாதாரண உடையில் தான் வருவார்.
இதனிடையே வாரிசு படத்தின் காஸ்டியூம் டிசைனர் விஜய்க்காக விலை உயர்ந்த உடையை வாங்க சென்றாராம். அதைப் பார்த்த விஜய் 500, 1000 ரூபாயில் உடை வாங்குங்கள் அது போதும் எனக் கூறினாராம் இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஜய் இவ்வளவு கஞ்சத்தனம் பண்ணுவாரா அல்லது படத்தின் பட்ஜெட்டை குறைப்பதற்காக என கமெண்ட் அடித்து வருகின்றனர்.