வடிவேலுவை ஓரம்க்கட்ட வேண்டிய டவுசர் பாண்டியின் பரிதபமான கதை.!

paari-vengat
paari-vengat

தளபதி விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்படத்தில் விஜயுடன் இணைந்து சிம்ரன், தாமு, மணிவண்ணன், பொன்னம்பலம், வையாபுரி போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு  இணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் டவுசர் பாண்டி என்கின்ற பாரி வெங்கட். இப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும் இடையில் இடையில் வரும் காமெடி முலம் நம்மை சிரிக்க வைத்தவர் பாரி வெங்கட் அதிலும் குறிப்பாக இருந்த இடத்திலேயே சென்னையை சுற்றி காட்டும் காட்சியை நினைத்து நினைத்து நம்மை சிரிக்க வைத்தது அந்த காமெடி மேலும் தற்போது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த காமெடியாக இருந்துவருகிறது.

இப்படத்தின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இதனையடுத்த அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது தொடர்ந்து அவர் தமிழ் சினிமா உலகில் வளரத் தொடங்கினார் இவரது வளரச்சியை கண்டு ஒரு கட்டத்தில் திக்குமுக்காடிப் போனார் வடிவேலு. மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு போட்டியாளராக வருவார் என கருதியதும் உண்டு.

இப்பொழுது அவர் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி இருப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறியது உண்டு. ஆனால் விதியின் விளையாட்டால் அவர் உயிரிழந்தார். திருநெல்வேலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பஸ்ஸில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னும் இடத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

காமெடி நடிகர் பாரி வெங்கட் என தெரியாததால் அனாதை போனம்  என கருதி போலீசார் அடக்கம் செய்தனர் அதன் பிறகு அவரது குடும்பத்தினர் உண்மை தெரிந்து வந்து புதைத்த உடலை மீட்டெடுத்த இறுதிசடங்கு முறைப்படி செய்து முடித்தனர். அவரது குடும்பத்திற்கு தளபதி விஜய் மற்றும்  பல நடிகர்கள் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.