சூர்யாவுக்கு கொடுக்கப்பட்ட ROLEX வாட்ச் புதுசு கிடையாது – கமல் செய்த தில்லாலங்கடி..! ரகசியத்தை உடைத்த லோகேஷ் கனகராஜ்.

surya

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மைகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகியிருந்தது. ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது படம் வெற்றி பெற காரணம் திரைக்கதை வித்தியாசமாக இருந்தது.

மேலும் அந்த கதாபாத்திரங்களில் சிறந்த நடிகர்கள் நடித்ததால் தற்போது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதுவரை விக்ரம் திரைப்படம் சுமார் 365 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பொழுதும் இந்த படத்திற்கான மவுசு குறைந்தபாடில்லை அதனால் படம் நிச்சயம் 500 கோடியை தொட்டுவிடும் என கூறப்படுகிறது. இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் மற்றும் உதவி இயக்குனர் 13 பேருக்கு பரிசு பொருட்களை கொடுத்தார் மேலும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal
kamal

ஆனால் உண்மையில் அந்த ரோலக்ஸ் வாட்ச் புதிய வாட்ச் கிடையாதாம் அதை அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் நடிகர் சூர்யாவுக்கு கமல் சார் ஒரு வாட்ச்சை கொடுத்திருப்பார் அது புதிய வாட்ச் கிடையாது. கமல் இதயத்திற்கு நெருக்கமான ஒரு வாட்சை தான் சூர்யாவுக்கு கிப்டாக கொடுத்திருக்கிறார். அது கமல் முதன்முதலில் வாங்கிய காஸ்லி வாட்ச் என இயக்குனர் கூறியிருந்தார்