Rajkiran : எம்ஜிஆர் சிவாஜியின் நடிப்பு திறமையை பார்த்து திரைக்கு வந்தவர்கள் ஏராளம் அவர்களில் ஒருவர் தான் அப்துல் காதர் என்கின்ற முஸ்லிம் இளைஞர் பின் நாட்களில் ராஜ்கிரன் என பெயரை மாற்றி சினிமாவில் வெற்றி கண்டார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் படம் வந்துவிட்டால் முதல் ஆளாக போய் படத்தை பார்த்து விடுவாராம்.
எம்ஜிஆர் படத்தை பார்த்து தான் சினிமாவில் வரவேண்டும் என நினைத்துள்ளார் முதலில் ராமநாதபுரத்தில் வினியோகதஸ்கர் ஆனார். 30 தியேட்டர்களுக்கு படங்களை கொடுத்து வந்தார். 30 வயதில் சென்னைக்கு வந்து தனது அலுவலகத்தை திறந்தார் இப்படியே நாட்கள் போக ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்கள் குழுவாக மாறி பின்னர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.
முதலில் ராமராஜனை வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ராமராஜன் நடித்த கரகாட்டகாரன் படத்தின் வினியோஸ்தருக்கான உரிமையை 1.5 லட்சத்திற்கு வாங்கினார் ஆனால் அவருக்கு கிடைத்தது 12 லட்சம் லாபம் கிடைத்தது அடுத்து கத்துரி ராஜா திரைக்கதை எழுத விஜயகாந்த் நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் விஜயகாந்த் நடிக்க மறுத்ததால் ராஜ்கிரன் ராமராஜனை சந்தித்துள்ளார் ஆனால் ராமராஜன் தற்போது கால்ஷீட் என்னால் கொடுக்க முடியாது 1993 ஜூலை யில்வேண்டுமானால் கால்ஷீட் தருகிறேன் எனக் கூற வேறு வழி இல்லாமல் கஸ்தூரிராஜா ராஜ்கிரணையே நடிக்க வைத்தார்.
அப்படி உருவான திரைப்படம் தான் என் ராசாவின் மனசினிலே வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் நடித்த என் எல்லாம் என் ராசாதான், அரண்மனை கிளி போன்ற படங்களும் மாபெரும் வெற்றி பெற்று காசு மழையில் நனைந்தார் பின்னர் தயாரிப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினாராம்.