ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தை.. அனுஷ்காவுக்கு கொடுத்து அழகு பார்க்கும் படக்குழு.? தேவசேனா கெத்து காட்டுவாரா.? எதிர்பார்க்கும் ரசிகர்கள்.

anushka-and-jothika
anushka-and-jothika

தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் அனுஷ்கா. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக அனுஷ்கா செல்லம் இருந்ததால் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை ஈசியாக அள்ளினார். சூப்பர் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் தமிழில் மாதவனுடன் இணைந்து 2 திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பல்வேறு பணி வாய்ப்புகள் கிடைத்தன அதன் விளைவாக விஜய், சூர்யா, அஜித், ரஜினி போன்ற பிரபலங்கள் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொண்டார். அனுஷ்கா செல்லத்துக்கு  நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பதை உணர்ந்த  இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சோலோ படங்களை கொடுக்க ஆரம்பித்தன.

அந்த வகையில் இவர் அருந்ததி மற்றும் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளிலும் தனது பயணத்தை திசை திருப்பினார் அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினாலும் அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதன்பிறகு இவருக்கும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைத்து வரும் அனுஷ்காவிற்கு  வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது. ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.  சந்திரமுகி படத்தை எடுத்த இயக்குனர் பி.வாசு இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார்.

jothika
jothika

இந்த படத்தில் ஹீரோயின்னாக யார் நடிக்கிறார் என்பதிற்கு முன்பாக சந்திரமுகியாக நடித்த ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக கிட்டத்தட்ட அவரை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது காரணம் ஏற்கனவே பல்வேறு பேய் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா இது போன்ற கதாபாத்திரத்தில் அசல்டாக நடிப்பார் என கூறப்படுகிறது.