இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் படையப்பா திரைப்படம் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்தார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
ஆனால் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை தவிர்த்து பார்த்தால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான் அனைவருக்கும் பிடிக்கும் பொதுவாகவே ரஜினியை எதிர்த்து நடிக்க வேண்டும் என்றால் மனதில் யாராக இருந்தாலும் ஒரு துணிச்சல் வேண்டும்.
ஆனால் நமது நடிகை ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார் மேலும் அந்த கதாபாத்திரத்தில் முதலில் வேறொரு நடிகை நான் தான் நடிப்பேன் என ரஜினியிடம் சண்டை போட்டு கேட்டாராம் . ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை நடிகை மீனாதான் நீலாம்பரி கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிக்கிறேன் எனக்கு கொடுங்கள் என ரஜினியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம்.
ஆனால் அதற்கு ரஜினி வில்லியாக நடிக்க வேண்டும் என்றால் முகத்தில் ஒரு பாவனை வேண்டும் ஆனால் அது உன் முகத்தில் இல்லை உன் முகம் பச்சை குழந்தை போல் இருக்கிறது என சாதுவாக பேசி உள்ளார். இருந்தாலும் மீனா அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அவரிடம் சண்டை போட்டதால் ரஜினி இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களை வைத்து மீனாவிடம் பேசி அதன் பின்பு தான் அவர் விலகியதாக ரஜினியே இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அளித்துள்ளாராம்.
மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்த நீலாம்பரி கதாபாத்திரம் மிகவும் அட்டகாசமாக இருந்தது ஆனால் மீனா நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.