தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் இவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
தொடர்ந்து மீண்டும் இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பத்தில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் இந்தியாவை சுற்றி தான் எடுக்கப்பட்டது ஒருவழியாக படக்குழு படப்பிடிப்பை முற்றிலுமாக முடிந்துள்ளது.
மேலும் படப்பிடிப்பு முடித்தை அடுத்து பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின அதை ஒன்றாக நெல்சன் திலிப் குமார் மற்றும் விஜய் இருவரும் கட்டி தழுவும் புகைபடத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு அசத்தியது. பீஸ்ட் படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டது அதை தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
தற்போது டப்பிங் பணிகளை மிகத் தீவிரமாக முடிக்க ரெடியாக இருக்கிறது. தளபதி விஜய்யும் டப்பிங்கை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அவரை தொடர்ந்து இந்த படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, அபர்ண தாஸ், யோகிபாபு, செல்வராகவன் மற்றும் பல பிரபலங்கள் அடுத்தடுத்து டப்பிங் பேச ரெடியாக இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் படத்தில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவனுக்கும் அரசியல்வாதி கதாபாத்திரம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் அவர் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.