90 களில் கொடிக்கட்டி பறந்த முரட்டு வில்லன் – தளபதி 67 படத்தில் இணைகிறார்.? லோகேஷின் அடுத்த சம்பவம் ரெடி.

vijay

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பரான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இதுவரை இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சிறப்பு படங்களை கொடுத்துள்ளார் இந்த படங்களை விட மக்களை அதிகம் கவர்ந்து இழுத்த திரைப்படம் அண்மையில் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தான்.

அதே சமயம் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுகியது. உலக நாயகன் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே போகாமல் இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் வான்டடாக விக்ரம் படத்தின் கதை சொல்ல கமலுக்கு ரொம்ப பிடித்து போகவே அந்த திரைப்படத்தில் நடித்து தயாரிக்கவும் செய்தார்.

பிரம்மாண்ட பொருள் செலவில் உருவான விக்ரம் திரைப்படம் ஒரு வழியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது படம் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது அதன் காரணமாகவே நல்ல வசூல் வேட்டை ஆரம்பத்திலேயே அள்ள ஆரம்பித்தது.

விக்ரம் திரைப்படம் தற்போது வரை ஐந்து வாரங்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது தற்பொழுது வரை விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் மட்டுமே சுமார் 175 கோடி வசூலிதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்பொழுதும் பல்வேறு இடங்களில் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் சில கோடிகளை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பழைய வில்லன் மன்சூர் அலிகான் நடிக்க வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

mansoor ali
mansoor ali

அப்படி என்றால் நிச்சயம் விஜய் மற்றும் மன்சூர் அலிகான் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என தெரிய வருகிறது மேலும் ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான ஒன்றாக இருக்கும்.