தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் தளபதி விஜய். கொரோனா காரணத்தால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடந்தது. அந்த வகையில் தியேட்டரும் சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது எனவே அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் திரைப்படங்கள் அனைத்தும் OTT வழியாக வெளியானது.
இந்நிலையில் சில மாதங்கள் கழித்து கொரோனா தாக்கம் ஓரளவிற்கு குறைந்ததால் தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள் அனுமதிக்கலாம் என்று உத்தரவு போடப்பட்டது. அந்தவகையில் முதன் முதலில் பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்தது.
அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதோடு மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருந்தார். விஜய் அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாரோ அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் 100 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானது. பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் முதல் நாள் மட்டும் 100 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானது இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா ஆக்கம் அதிகரித்ததால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால் தற்பொழுது ரிலீசாகும் தேதியில் இருந்து பின் தங்கியுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் லாபம். இத்திரைப்படத்தை மே மாதத்தில் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என்று விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளாராம். அதோடு மட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் அளவிற்கு லாபம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கிறாராம் விஜய் சேதுபதி.