தமிழ் சினிமாவில் வித்யாசமான திரைப்படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவராக இருப்பவர் செல்வராகவன். இவர் இயக்கம் படங்கள் ஒவ்வொன்றும் மக்களை வெகுவாக கவர்வதோடு படத்தில் நல்லதொரு கருத்தை சொல்வதால் இவரது படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் வளரத் தொடங்கியது மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.
இதனால் செல்வராகவன் தொட முடியாத உயரத்தை தமிழ் சினிமாவில் அடைந்தார் மேலும் சிறப்பான புதிய திரைப்படங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபகாலமாக சிறப்பு கூடிய திரைப்படங்களை அவர் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில் நடிகராக களம் இறங்கி அடுத்ததடுத்த படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் இவர் சாணி காயிதம், விஜய் 65பல்வேறு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இப்படி இருக்க தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அந்த வகையில் தனுஷை வைத்து “நானே வருவேன்” என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளார் அதன்பிறகு புதுப்பேட்டை 2, ஆயிறதில் ஒருவன் 2 போன்ற அடுத்தடுத்த படங்களை எடுக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகின்றன இதனால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இயக்குனர் செல்வராகவன் தன்னுடன் பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவர் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். லீலாவதி, ஓம்கார் என்ற இரு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது முன்றவதாக ஒரு மகன் பிறந்துள்ளார் அவருக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.
ரிஷிகேஷியை செல்வராகவன் பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளபக்கத்தில் வைரலாகி வருகிறது.