திரை உலகில் அண்ணன் தம்பியாக தங்களுடைய சிறந்த திறமையை வெளிகாட்டி வருபவர் தான் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன். இந்நிலையில் நமது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் தனுஷ் அதில் கொடுத்திருக்கும் போது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது ஏனெனில் வாயில் சுருட்டுடன் இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஆனால் இந்த பஸ்ட் லுக் போஸ்டரே தனுஷிற்கு பிரச்சனை அமையும் என்பது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இருப்பதன் காரணமாக தனுஷிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இப்படி ஒரு பிரச்சனையா என தனுஷ் அவர்கள் புலம்பி வருகிறார் ஏற்கனவே விஐபி திரைப்படம் வெளிவந்த நிலையில் தற்போது அந்த திரைப்படம் பற்றி ஒரு புதிய புகார் எழுந்த நிலையில் தற்போது மறுபடியும் சிகரெட்டை வைத்து தனுஷை டென்ஷனாகி வருகிறார்கள்.
பொதுவாக திரைப்படத்தில் இவர் நடிக்கும் புகைபிடிக்கும் காட்சி நன்றாக தான் இருக்கும் ஆனால் அவற்றை விளம்பரம் செய்வது மிகவும் தவறான விஷயம் ஆகையால் தமிழ்நாடு அரசு இவர் மீது புகார் எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வழக்கு முடிந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தில் மறுபடியும் ஒரு வழக்கு உருவானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் சர்க்கார் திரைப்படத்தில் கூட தளபதி விஜய் இது போன்ற சம்பவங்களை நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது மிகவும் கொடூரமான செயலாக இருப்பது மட்டுமல்லாமல் அவற்றை ஊக்குவிக்கும் வகையில் எந்த ஒரு செயலும் செய்யாமல் இருப்பது நல்லது தான்.