நடிகராக அவதராம் எடுக்கும் செல்வராகவன்.! அதுவும் கீர்த்தி சுரேஷ் படத்தில் வைரலாகும் போஸ்டர்.!

selvaragavan-and-keerthi1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் மற்றும் வித்தியாசமான இயக்குனராக காணப்படுபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உச்சத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் அதில் ஒருவராக கருதப்படுபவர் தான் அவரது தம்பி தனுஷ் அவரை போல பலரும் சினிமா உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது அவரது படங்களிலேயே தலைகாட்டாத செல்வராகவன் அவர்கள் கீர்த்தி சுரேஷின் படத்தில் தலைகாட்ட உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உளளது.கீர்த்தி சுரேஷ் பென்குயின் படத்தைத் தொடர்ந்து தற்போது சாணி காகிதம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் தான் செல்வராகவன் அவர்களும் நடித்துள்ளார் இப்படத்தின் போஸ்டர் வெளிவந்து மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகிறது படத்தின் போஸ்டரில் ஒருபக்கம் செல்வராகவன் கத்தியுடனும் மறுபக்கம் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் நிற்கும் போஸ்டர் இடம்பெற்று உள்ளது.

இந்த படத்தை ஸ்கிரீன்ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு இராக்கி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த படத்தின் போஸ்டர்.