காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் சந்தானம் இவர் சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் குறித்து பேசி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் முக்கியமாக இந்த படத்திற்கு தமன் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலங்களில் இந்த படத்தினை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என்பதற்காக காத்திருந்த நிலையில் தற்பொழுது டப்பிங் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது தமிழ் திரைப்படங்களுக்கு தெலுங்கு திரைவுலகம் திரையரங்குகளை மிகவும் குறைவாக தான் தருகிறது ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் தெலுங்கு திரைப்படம் நேரடியாக வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கவுன்சில் தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என முடிவு செய்திருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ஆந்திராவில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு தெலுங்கு தயாரிப்பாளர்களின் இந்த முடிவிற்கு சீமான், லிங்குசாமி ஆகியோர்கள் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் அவர் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்தானம் இந்த பிரச்சனையை அவர்கள் தான் பேசி முடிவு செய்வார்கள் நாம் இங்கு இருந்து கொண்டு எந்த பிரச்சனைக்கும் முடிவு சொல்ல முடியாது.
அது வேறு மாநிலம், வேறு மொழி மேலும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு தான் இதனால் அவர் இதற்காக போராடி உரிமையை வாங்குவார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது அதேபோல் இங்கிருந்து அங்கு சென்று படம் எடுப்பவர்களுக்கு நாம் தமது ஆதரவை கொடுக்க வேண்டும் விஜய் சார் ஒரு படம் பண்ணி இருக்கிறார் என்றபோது அதற்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்.
அங்கு படம் வெளியாவதற்கு என்ன தேவையோ அதற்கான கருத்து உரிமையை சொல்வோம் மேலும் தயாரிப்பாளரே தெளிவாக இருக்கும் பொழுது அவர் நிச்சயம் பேசி படத்தை வெளியிடுவார். இதனை அடுத்து நிபுணர் ஒருவர் பொங்கல் அன்று வாரிசு படம் பார்ப்பீர்களா? இல்லை துணி படம் பார்ப்பீர்களா? என கேள்வி கேட்ட நிலையில் அதற்கு சிரித்த சந்தானம் நீங்கள் எந்த படம் பார்ப்பீர்கள் என கேள்வி கேட்டார் அதற்காக அவர் இரண்டு படங்களையும் பார்ப்பேன் என கூற அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டு படத்தையும் பார்ப்ப நான் பார்க்க மாட்டானா என்றார்.