துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் களமிறங்கி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல மற்றும் விடுதலை. சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான பத்து தல மற்றும் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் போட்டி போட்டு வருகின்றது.
அதாவது பத்து தல திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்து படகுழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்த நிலையில் இதனை அடுத்து விடுதலை படத்தின் வசூல் நிறுவனத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது எனவே அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கமர்சியல் படமாக உருவாகி இருக்கும் நிலையில் விடுதலை படம் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் பலரும் தமிழ் சினிமாவின் பெருமை எனவும் பாராட்டி வருகின்றார்கள். அதேபோல் சிம்பு கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதமேனன், சந்தோஷ் பிரதா என பலருடைய கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பத்து தல.
இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. மேலும் பத்து ல திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் நாள்தோறும் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதி வருகின்றது அந்த வகையில் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் அதிக வசூலை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 2.5 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விடுதலை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் பத்து தல படத்தின் வசூலை முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.