பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படகுழு.

ponniyin-selvan-2
ponniyin-selvan-2

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்திக், பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, உள்ளிட்டா பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் முதல் பாகத்தின் படபிடிப்பின் போதே இரண்டாவது பாகத்தின் படபிடிப்பை முடித்து விட்டனர். முதல் பாகம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பல சாதனை படைத்தது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து லுக் அவுட் வெளியாகும் என படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் இன்று மாலை 4 மணி அளவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் லுக் அவுட் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அந்த வகையில் இன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் லுக் அவுட் வெளியாகி உள்ளது மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு கொஞ்சம் சந்தோசமாக தான் இருக்கும் அதனை தொடர்ந்து 28ஆம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிருக்கு திரையரங்கம் அதிர இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.