இயக்குனர் மணிரத்தினம் சினிமா உலகில் ரஜினி கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான படங்களை கொடுத்து வெற்றி கண்டுள்ளார் இருப்பினும் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.
ஒரு வழியாக லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பொருட்செளவில் எடுத்தார் முதல் பாகம் அவர் சொன்னபடி செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பிரகாஷ் ராஜ்.
மற்றும் சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஜெயராம், கிஷோர் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக தொடர்ந்து இந்த படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது தொடர்ந்து வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது.
மூன்று நாள் முடிவில் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 230 கோடி வசூல் செய்தது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வரும் என பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்தது இரண்டாவது பாகம் அடுத்த வருடம் மே மாதத்தில் எதிர்பார்க்கலாம் என கூறி இருக்கிறார். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் மேலும் இந்த செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.