இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படத்தின் டீசர் மிரட்டலாக வெளியானது. இந்த படத்திற்கு தேவையான பிஜிஎம்யை கொடுத்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இந்த கூட்டணி 11 ஆண்டுகளுக்கும் பின் தற்போது இணைந்துள்ளனர் இதற்கு இடையில் 2018 ஆம் ஆண்டு ரவுடி பேபி என்ற பாடல் மூலம் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்துள்ளனர். முதல் கூட்டணி துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஆரம்பித்தது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் முதன் முதலாக தனுஷ் நடித்து வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் விமர்சனம் ரீதியாக தோல்வியை தழுவி இருந்தாலும் இந்த படத்தில் அமைந்துள்ள பாடலுக்காகவே இந்த படம் ஓடியது. மேலும் இந்த படத்தின் நடித்ததற்காக நடிகர் தனுஷ் அதிகமாக விமர்சிக்கப்பட்டார் இருந்தாலும் விடாமுயற்சியினால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
அதன் பிறகு புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன 2006, 2008, 2011,ம் ஆண்டுகளில் இந்தக் கூட்டணி வெற்றி படங்களை கொடுத்துள்ளது. தனுஷ் மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார் அதேபோல் நான்கு தேசிய விருதுகளையும் கைப்பற்றினார்.
இந்த நிலை என் 2012 ஆம் ஆண்டு மாரி 2 படத்தின் விழாவில் பேசிய தனுஷ் யுவன் சங்கர் ராஜாவை வெகுவாக புகழ்ந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் அவர்கள் தான் யுவன் சங்கர் ராஜாவை அறிமுகப்படுத்தியதாகவும். சினிமாவில் அறிமுகமே இல்லாத எனக்கு இசையமைத்து அந்த படத்தை ஓட வைத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். அன்று நாங்கள் இருந்த நிலையில் படம் மட்டும் ஓடாமல் இருந்தால் நடுத்தெருவுக்கு வந்திருப்போம் எனவும் யுவன் எங்களை காப்பாற்றினார் என தனுஷ் கண்கலங்கி கூறியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா எனக்கு இப்பவும் ஹீரோ தான் என கூறியுள்ளார்.