சின்னத்திரையில் நடித்து வரும் பல நடிகர் நடிகைகள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சினிமாவிலும் கால்தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமானவர் புகழ்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சி துவங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழின் வளர்ச்சி வேற லெவலில் உயர்ந்தது இந்த நிகழ்ச்சியில் புகழின் டைமிங் காமெடி ரியாக்சன் போன்றவை மக்கள் பலரை கவர்ந்து இழுத்தது.
பின்பு இவருக்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன், அஜித்தின் வலிமை படம், அஸ்வினுடன் என்ன சொல்லப் போகிறாய் போன்ற பல படங்களில் காமெடி நடிகராக நடித்து.
தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் புகழ் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு மக்களை என்டர்டெய்மெண்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி எபிசோடில் ப்ரோமோ வெளியாகியுள்ளது அந்தப் ப்ரோமோவில் புகழ் இந்த நிகழ்ச்சிக்கு “நான் பணத்திற்காக வரவில்லை உங்கள் மனதிற்காக தான் வருகிறேன்” என கூறியுள்ளார்