தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் மற்ற மொழிகளிலும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது அதுபோல தெலுங்கில் டாப் நடிகர் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தில் நடித்தார் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து இருந்த் அந்த கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் நாராப்பா என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது இதுகுறித்து பிரியாமணியிடம் திரைப்படம் உங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுத்தது என கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர்.
நான் கிராமத்து சாயலில் தமிழில் முதல் படமான பருத்திவீரன் படத்திலேயே நடித்து விட்டேன் ஆனால் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான ரோல்களிலேயே நடித்து உள்ளேன் ஆனால் இது எந்த மாதிரியான அனுபவம் என்பது எனக்கு கொடுக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ரசிகர்கள் என்னை கிளாமராக பார்த்துவிட்டு தற்போது கிராமத்து சாயலில் பார்த்து என்னை ஏற்றுக் கொள்வார்களா என்று முதலில் தயங்கினேன் அப்படித்தான் எனது எண்ணமும் இருந்தது.
பல வருடங்கள் கழித்து மீண்டும் கிராமத்து சாயலில் நடிப்பதால் எனக்கு அது ஒரு புதுவிதமாக இருந்தது இருப்பினும் அசுரன் படத்தை நான் தமிழில் பார்த்துவிட்டேன் அதில் மஞ்சுவாரியர் நடிப்பில் மிகப்பெரிய அளவில் இருந்தது அதன் பிறகு நான் இந்த படத்தில் சந்தோஷப்பட்டு நடிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய ரோல் மிக சிறப்பான ஒன்று அதை சரியாக புரிந்து கொண்டு நடித்தேன் அதுபோலதான் வெங்கடேஷும் இதுவரை கிராமத்து சாயலில் உள்ள படங்களில் நடித்தது கிடையாது இருப்பினும் வேற லெவலில் அவரது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் படம் வெளிவந்த தற்போது நல்லதொரு வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் பலரும் வாழ்த்தி வருகின்றனர் எனது ரசிகர்களும் இந்த கிராமத்து சாயலில் என்னைப் பார்த்து ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் புகழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கில் உருவான நாரப்பா திரைப்படத்தில் நான் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதை இயக்குனர் வெற்றிமாறனுடன் சொன்னேன் அதற்கு நீங்கள் அந்த ரோலில் சூப்பராக நடிப்பீர்கள் என எனக்கு பாசிட்டிவ் வார்த்தைகள் சொன்னார் அதை ஒவ்வொரு நாள் சூட்டிங்கின் போதும் நான் பாசிடிவாக எடுத்துக் கொண்டு நடித்தேன் என குறிப்பிட்டார்.