எங்களுடைய தோல்விக்கு காரணம் மூன்று ரன் அவுட் இல்லை.. கருணால் பாண்டியா பேச்சு

krunal
krunal

ஐபிஎல் 16 – வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது நேற்று எலிமினேஷன் ரவுண்டில் லக்னோ அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரிட்சை நடத்தின  இந்த போட்டி சென்னையில் நடந்தது டாஸ் வென்ற ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் இருந்து மும்பை அணி விக்கெட்டுகளை விட்டாலும் அதிரடியை மட்டும் நிறுத்தவே இல்லை..

முதல் 10 ஓவருக்கு 90 ரங்ளுக்கு மேல் எடுத்து இருந்தது அதன் பிறகு அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசி நேரத்தில் திலக் வர்மா,  வதேரா போன்றவர்கள் அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன் அணி 20 ஓவரில் 182  எடுத்தது. இந்த இலக்கை துரத்திய லக்னோ அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டைகளை இழுந்தாலும்..

அதன் பிறகு stoinis மற்றும் பாண்டியா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இதன் மூலம் ரன் கிடுகிடுவென உயர்ந்தது லக்னோ அணியின் கட்டுப்பாட்டில் தான் மேட்ச் இருந்தது. அதன் பிறகு பாண்டியா அவுட்டாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 101 க்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் மும்பை இந்தியன் அணி 81 ரன்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு பேசிய  கருணால்  பாண்டியா எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம்  ரன் அவுட் கிடையாது. பியூஸ் சாவ்லா  வீசிய பந்தை நான் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆகினேன். அந்த ஷாட்டை நான் விளையாண்ட இருக்கக் கூடாது என்னுடைய தவறு தான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.

என்னுடைய விக்கெட்டுக்கு பிறகு தான் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தது இதன் மூலம் நாங்கள் தோல்வியை தழுவினோம் என கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணி நாளை குஜராத் அணியை எதிர்த்து மோதுகிறது இதில் வெற்றி பெரும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் இறுதிப்போட்டியில் பலப்பரிட்சை  நடத்தும்..