புருஷனை ஒழுச்சிகட்ட 59 லட்சம் செலவு செய்த மனைவி.! இதெற்கெல்லாம் காரணம் அடுத்தவர் மீது உள்ள காதல்தான்…

wife
wife

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வயது 39 இவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் தொழிலதிபரின் மனைவி திருமணத்திற்கு முன்பே 13 வருடங்களாக பரேஷ் கோடா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் கழித்தும் இவர்களுடைய அந்த கள்ளத்தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. அதுமட்டுமல்லாமல்  இந்த இருவரும் அவபோது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விஷயம் அந்த தொழிலதிபருக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தன் மனைவியையும் அந்தக் கள்ளக்காதலனையும் அழைத்து கண்டித்து இருக்கிறார்.

ஆனால் அவர் கூறியதை கொஞ்சம் கூட கேட்காத அவருடைய மனைவி கள்ளக்காதலுடன் தொடர்பிலிருந்து வந்திருக்கிறார். கடந்த மாதம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக தனது வீட்டில் உள்ள அலமாரியில் 35 லட்சம் பணம் வைத்திருந்தார் அந்தத் தொழிலதிபர். இதை அவருடைய மனைவிக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு அக்டோபர் 18ஆம் தேதி அலமாரியில் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டுபிடித்த தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் இது குறித்து தனது மனைவியிடம் கேட்டபோதும் எப்போதும் போல பேசாமல் மழுப்பி இருக்கிறார் இது தொடர்ந்து அந்த கள்ளக்காதலனிடமும் கேட்டு இருக்கிறார் ஆனால் அவர்கள் இருவரும் எதுவும் கூறாததால் நேரடியாக தன் மனைவியின் மீதும்  அந்த கள்ளக்காதலர் மீதும்  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் மாணவியை கைது செய்தனர்  விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதாவது மனைவிக்கும் தொழிலதிபருக்கும் அடிக்கடி சண்டை வருவதால் அவரை தன் கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க சூனியம் வைக்க இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஜோதிடர் பாடல் சர்மாவை நாடி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தான் கள்ளக்காதலுடன் சேர தடையாக இருக்கும் கணவரை எப்படியாவது தன்னுடைய பேச்சுக்கு கொண்டு வர வேண்டும் என்று சூனியம் வைக்க அந்த கள்ளக்காதலனுடன் அந்த தொழிலதிபர் மனைவி போட்ட திட்டம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல் ஜோதிடர் பாடல் சர்மா சூனியம் செய்வதற்கு கட்டணம் கேட்டுள்ளார் அந்த சூனியம் வைப்பதற்கு தொழிலதிபர் மனைவி பணம் மற்றும் தங்க நகைகளை கொடுத்துள்ளார் சுமார் 59 லட்சம் வரை ஜோதிடர் பறித்ததாக கூறப்படுகிறது. இது அனைத்தும் போலீசாருக்கு தெரிய வரவே தொழிலதிபரின் மனைவியின் முன்னாள் காதலர் பரேஷ்கோடா மற்றும் ஜோதிடர் பாடல் சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.