ரியல் ஹீரோ அஜித் தான்.. உண்மையான குணத்தை வெளியே சொன்ன பிரபல நடிகரின் மகன்

ajith
ajith

சினிமா உலகில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தவர் அஜித் ஆனால் கடந்த சில வருடங்களாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்கின்றார். இப்பொழுது கூட மகிழ் திருமேனி இயக்கும் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். திரை உலகில் ஓடும் அஜித் நிஜ உலகில் அதே மாதிரியான குணம் கொண்டவர் தான்..

படத்தில் எப்படி அஜித் மக்களுக்கு உதவி செய்வாரோ அதேபோல நிஜத்திலும் தன்னை தேடி வருபவர்களுக்கும், சிகிச்சை உதவிகளுக்கும் காசுகளை வாரி வாரி  வழங்கி வருகிறார் அஜித். இந்த நிலையில் பிரபல நடிகரின் மகன் அஜித் பற்றி வெட்ட வெளிச்சமாக சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தமிழ் திரை உலகின் ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர் இவரது மகனான விஜய் சங்கர் சென்னையில் பிரபல கண் மருத்துவராக இருந்து வருகிறார் இவர் அஜித்தின் நெருங்கிய நண்பரும் கூட.. இவர் அடிக்கடி இலவசமாக கண் சிகிச்சை முகாம் நடத்தி வந்தார்.

இதை எல்லாம் பார்த்த அஜித் யாரேனும் ஆபரேஷன் செய்ய பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டாம் அவர்களின் சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் நான் கொடுக்கிறேன் என சொன்னதோடு பணம் கொடுத்து உதவி உள்ளார். மேலும் இது எல்லாம் வெளியே தெரிய வேண்டாம்  இதை விஜய் சங்கரிடம் சொல்லி உள்ளார்.

இதை விஜய் சங்கர் தம்பி சஞ்சய் சங்கர் அளித்த பேட்டியின் மூலம் வெளியே வந்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் இயக்குனர்களுக்கு கார், பைக் வாங்கி கொடுப்பது தனது வீட்டில் வேலை புரிந்த பலருக்கும் சொந்த வீடு மற்றும் பல லட்சங்கள் காசை கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.