விக்ரம் திரைபடத்தின் வெற்றியால் வந்த வினை..! நன்றாக மாட்டிக் கொண்ட கமலஹாசன்..!

kamal-01
kamal-01

தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம்தான் விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசன் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் இயக்கியுள்ளார்.

மேலும் பலரும் உலகநாயகன் என்ற பெயர் மறந்த நிலையில் தற்போது மீண்டும் அவருடைய பெயரை உலகம் எங்கும் ஒலிக்க செய்ய வைத்துவிட்டது இந்த விக்ரம் திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெற்றியை கண்டு ஒரு பக்கம் கமல் ரசித்துக்கொண்டிருந்தார் மற்றொரு பக்கம் இந்த திரைப்படத்தின் மூலமாக பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி கண்டதன் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கமலஹாசன் அவர்கள் பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் யூடியூப் சோசியல் மீடியா என எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் கமலுடைய பேட்டி தான் வலம்வந்து கொண்டிருக்கிறது.  அந்த வகையில் இன்னும் ஆறு மாதங்களுக்கு விக்ரம் திரைப்படத்தை வைத்துதான் அனைவரும் வியாபாரம் செய்ய போக போகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி கமலுடைய வரவேற்பு இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் தெலுங்கில் தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட நிலையில் எப்படியாவது இந்த திரைப்படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் லிங்குசாமி ஒரு பெரிய பிளான் போட்டு உள்ளார். இந்நிலையில் அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமலஹாசனை வரவைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகனாக வலம் வரும் கமலஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல்வேறு ரசிகர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சி பிரபலமாகும் ஆகையால் இதன் மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம் என்று நமது இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஆனால் கமல் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருடைய திரைப்படத்திற்கு ஆபத்து இருப்பது மட்டுமில்லாமல் இதனை தவிர்க்க முடியாத நிலையிலும் இருக்கிறார்.