கூட பிறக்காத அண்ணனின் சவகாசத்தால் வந்த வினை..! பவானி ரெட்டி வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமான சம்பவமா..?

bhavani-reddy-2
bhavani-reddy-2

நடிகை பவானி ரெட்டி அவர்கள் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பதிந்து வருகிறார்கள் அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்சிகளை இவரும் கூறி உள்ளார்.

அந்தவகையில் நான் பல்வேறு வேலைகளை செய்து உள்ளேன் ஆனால் எனக்கு எந்த வேலையும் பிடிக்கவில்லை. அந்தவகையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஆடிஷனுக்காக போட்டோ ஷூட் எடுக்க சென்று உள்ளேன் ஆனால் அங்கு நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு அதன் பிறகு வாருங்கள் என்று கூறிவிட்டார்கள்.

பின்னர் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரதீப்பை காதலித்து எங்கள் வீட்டை எதிர்த்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். பின்னர் திரைப்பட வாய்ப்பு வருகிறதோ இல்லையோ என அதை நம்பி இருக்க வேண்டாம் என்ற காரணத்தினால் சீரியலில் இருவரும் நடிக்க ஆரம்பித்தோம். இவ்வாறு லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்த நாங்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் பிறகு திருமணம் செய்து கொண்டோம்.

இவ்வாறு எங்கள் திருமணத்துக்கு பிறகு நான் கர்ப்பம் ஆனேன் ஆனால் என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் காரணமாக அவை தானாகவே கலைந்துவிட்டது பின்னர் என் கூட பிறக்காத அண்ணனின் பிறந்தநாளுக்காக எங்கள் வீட்டுக்கு அவரை வரவழைத்தோம்.

அங்கு அவர் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்தது மட்டுமல்லாமல் சிகரெட் பிடிக்க  சென்றால் உடனே நான் வேண்டாமென தடுத்து நிறுத்தியதன் காரணமாக கோபமடைந்து வீட்டை விட்டு கிளம்பிவிட்டார். பின்னர் ஏன் இப்படி செய்கிறாய் நான் உனக்காக தான் என் வீட்டை விட்டு வந்திருக்கிறேன்  என்னிடம் சண்டை போடாதே என்று கூறினார்.

உடனே பிரதீப் ரூமில் கதவை சாத்திக்கொண்டு  புடவையில் தூக்கிட்டு கொண்டார். ஆனால் பவானி தன்னை பயப்படுத்துவதற்காக தான் இப்படி செய்கிறார் என்று நினைத்து உறங்கி விட்டாராம் பின்னர் காலையில் தான் தெரிந்தது இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

bhavani reddy-1
bhavani reddy-1

அப்பொழுது என் கணவர் இறந்ததற்கு நான் என்னுடைய அண்ணனுடன் தவறாக இருந்ததை பார்த்ததால் தான் பிரதீப் இப்படி செய்துகொண்டார் என சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் பரவின. ஆனால் காவல்துறை அதிகாரிகள் என் மீது தவறு இல்லை என என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.