தற்போது தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென் மாவட்டங்களான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்.
மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது அதுமட்டுமில்லாமல் தென்தமிழகத்தில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஒன்று ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மேலும் நாளை மறுநாள் ஈரோடு, சேலம், நாமக்கல் ,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இடி மின்னல்கள் உடன் கனத்த மழை பெய்ய அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் வட கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 6 தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்கள் ஆகிய இடத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் அந்நாளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை காணப்படும்.
மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியான ஆந்திரா ஒடிசா போன்ற இடங்களில் கடலோரப் பகுதிகளில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வரை காற்று வீச படம் இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.