ரகுவரன் கேட்ட.. அந்த கேள்விகள் தான் எனது வாழ்க்கையை மாறியது சீக்ரெட்டை உடைக்கும் சூர்யா.!

surya
surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன இதனால் அவரது மார்க்கெட் இன்னுமே உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது இப்பொழுது கூட அவரது கையில் வணங்கான்,  சூர்யா 42, ஆகிய படங்கள் இருக்கின்றன.

இந்த படங்களை தொடர்ந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்காரா உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்பொழுது சூப்பராக ஓடும் சூர்யா.. ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வி படங்கள் மேலும் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து விமர்சனங்களும் மோசமாக இருந்தன..

அந்த சமயத்தில் தான் நடிகர் சூர்யா உடன் ஒரு படத்தில் ரகுவரன் நடித்திருந்தார். அப்பொழுது இருவரும் ரயிலில் பயணித்திருக்கும் போது இரவு நேரத்தில் சூர்யா உறங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது ரகுவரன் திடீரென எழுப்பி உனக்கு எப்படி உறக்கம் வருகிறது என கேட்டுள்ளார்.

நம்மைப் பற்றி இழிவாக பேசுபவர்கள் வாயை அடைப்பதற்கு வெற்றி ஒன்று தான் வழி.. ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் இருக்கும் உனக்கு எப்படி தூக்கம் வருகிறது வெற்றியை ருசித்த பிறகு தான் இரவில் நன்றாக தூக்கம் வரும் என ரகுவரன் கூறி உள்ளார் அவர் சொன்னதை சூர்யா ஒரு பாடமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு ஒவ்வொரு படத்திற்கும் கடுமையாக உழைத்தார் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யா காக்கா காக்க, பிதாமகன், நந்தா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.. நடிகர் ரகுவரன் சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை என் வாழ்க்கையை மாற்றி போட்டதாக பல பேட்டிகளில் சூர்யாவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.