G. Marimuthu Last mintues : குணச்சத்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதினார் இவருக்கு கடைசி நேரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. மாரிமுத்து நேற்று டப்பிங் பேசி விட்டு ஒரு மாதிரியாக இருப்பதாக கூறி வெளியே வந்துள்ளார்.
அதன் பிறகு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர் சொல்லி உள்ளது. திடீரென்று மாரடைப்பு ஏற்படாது ஏதாவது ஒரு சிம்டம் காட்டி இருக்கும் அதை மாரிமுத்து அலட்சியமாக எடுத்துக் கொண்டிருப்பார் இது போன்ற நேரத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும் உடனே மருத்துவர்களை சந்தித்து இருக்க வேண்டும்.
ஆனால் அந்த நேரத்தில் மாரிமுத்து காரை ஓட்டிக்கொண்டு வந்து பெரிய தப்பு யாரையாவது உதவிக்கு அழைத்திருக்கலாம் இந்த நேரத்தை தான் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்வோம் இந்த நேரத்தை அவர் தவற விட்டு விட்டார் மருத்துவமனைக்கு வந்து அவரால் காரில் இருந்து இறங்க முடியவில்லை 20 நிமிடம் போராடினோம்.
மருத்துவமனை ஊழியர்கள் அவரை கீழே இறக்க முயற்சி செய்தபோது நெஞ்சை பிடித்து அவர்கள் மீது அவர் அப்படியே சாய்ந்து விட்டார் உடனே அவருக்கு சிபி ஆர் சிகிச்சை தொடங்கினோம் மசாஜ், வெண்டிலேஷன் ஆகியவற்றையும் முயற்சித்தோம் 15 முதல் 20 நிமிடம் எப்படியாவது அவரை மீட்டு விடலாம் என்று போராடினோம்.
ஆனால் அவர் வரும்பொழுது பிபி பல்ஸ் இரண்டுமே இல்லாததால் எந்தவிதமான சிகிச்சையும் பயனளிக்கவில்லை என மருத்துவர் ஆனந்த் குமார் கூறியுள்ளார். மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த எடுத்து செல்லப்பட்டது இன்று 10 மணிக்கு மாரிமுத்துவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது மகன் அகிலன் தெரிவித்துள்ளார்.