சினிமா உலகிற்கு புதுவதமான புதிய படைப்புகளை கொடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் அப்படி தமிழ் சினிமாவுக்கு பல ஆண்டுகளாக புதிய படைப்புகளை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் சங்கர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றே பலரும் அழைத்து வருகின்றனர். மேலும் அது போன்று எடுக்கும் படங்களும் அதிக அளவில் லாபத்தை பெற்றுத் தருவதால் இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
இவர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். இவருக்கு முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதன மூலம் அடுத்த சிறந்த கதைகளை இயக்கியதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்ததோடு மட்டுமில்லமால் தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தையும் நிரந்தர இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர் கடைசியாக ரஜினியை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்ததன் மூலம் இத்திரைப்படம் வசூலில் 700 கோடி இரவு 800 கோடி வரை கைப்பற்றியது இதை தொடர்ந்து தற்போது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்து உள்ளார் இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு பற்றி நாம் பார்க்க உள்ளோம்.
1.சங்கரின் வீட்டு மதிப்பு சுமார் 10 கோடி.
2.சங்கர் அவர்கள் பயன்படுத்தும் கார்களான ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ கார்களின் மதிப்பு சுமார் 8 கோடி.
3.ஷங்கர் ஒரு படத்திற்காக சுமார் 32 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அப்படிப் பார்க்கும்பொழுது சங்கரின் சொத்து மதிப்பு சுமார் 140 கோடி. இத்தகவல் அதிகாரபூர்வமான தகவல் அல்ல. பிரபல தளங்கள் சொன்னதை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.