இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூலில் 500 கோடியை எட்டியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, என பலரும் நடித்திருந்தனர்.
மக்களின் எதிர்பார்ப்பில் உருவாகிய இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகும் என எதிர்பார்த்த காத்திருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றாத ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள பெரிய படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயின்ட் நிறுவனம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மட்டும் கைப்பற்ற முடியாமல் போனது.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தை கைப்பற்றிய உதயநிதி அவர்கள் ஒரு பேட்டியில் இது குறித்து பல சுவாரஸ்யமான தகவலை கூறியிருந்தார் அப்போது பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார் அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் என சில தகவல்கள் கசிந்து இருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்து பேசிய உதயநிதி அவர்கள் இந்த தகவலை சொன்ன உடனே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.