தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது வயதான காரணத்தினால் இவருடைய நடிப்பில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஆனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தான் வருகிறது.
அந்த வகையில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தோல்வியை பெற்றது. தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்க இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை முடிந்த நிலையில் இதுவரையிலும் படப்பிடிப்பு துவங்காமல் இருந்து வருகிறது.
மேலும் இது குறித்து படக்குழுவினர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதன் காரணமாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை பல்லவி என்பவர் ஏற்கனவே படத்திலிருந்து வெளியேறி விட்டார் எனவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 7 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் இதற்காக ரூ25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.