தளபதி விஜய் நெல்சன் திலிப்குமார் உடன் கைகோர்த்தது பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப் படத்தின் சூட்டிங் ஆரம்பத்தில் ஜார்ஜியா பின் இந்தியாவை சுற்றி சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டு வந்த நிலையில் மீண்டும் சென்னை மற்றும் கேரளா என தனது சூட்டிங்கை மாற்றி படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறது.
இதுவரை 75 பர்சன்டேஜ் படப்பிடிப்பைய முடித்து உள்ளதாக கூறப்படுகிறது. படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வலிமை படத்துடன் மோதாது என்பதுதான் உண்மை ஏனென்றால் போஸ்ட் புரமோஷன் மற்ற வேலைகள் இழுக்கும் என்பதால் பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது ஆனால் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடுகிறதோயில்லையோ மறைமுகமாக இந்த படத்தில் பணியாற்றும் பிரபலங்கள் அப்டேட்டை வெளியிட்டு வருகின்றன.
போதாத குறைக்கு பூஜா ஹெக்டே படத்தின் சூட்டிங் எங்கு நடக்கிறது என்னுடைய காட்சிகள் முடிந்தது. என தனது அப்டேட்டை ஒரு பக்கம் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.இதனால் தளபதி ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்காக சென்னையில் மால் போன்ற ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட செட் போட்டு அமைக்கப்பட்டிருந்தது.
தொடர் மழையின் காரணமாக தற்போது நகரங்களிலும் மழை நீர் தேக்கப்பட்டு உள்ளது அதுபோல பீஸ்ட் படத்திற்காக சென்னையில் மால் போன்ற ஒரு செட் போட்டது மழையால் பழுதடைந்து பல கோடி லாஸ் ஆகி உள்ளது. மாலில் மழைநீர் புகுந்து இருக்கும் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.