நடிகர் தனுஷ் அவர்கள் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியானது. இந்த படம் வெளியான பொது ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று செலவு செய்த காசை கூட எடுக்க முடியாமல் திணறி தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் 1930 முதல் 1940 காலங்களில் இடையே நடந்த வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மிலர் திரைப்படம் முடிந்த உடன் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்திலும், மதுரை அன்புச் செழியன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் அவர்கள் கமிட்டாகி இருக்கிறார்.
இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ் ஒவ்வொரு திரைப்படத்தையும் முடித்துவிட்டு அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் எச் வினோத் மற்றும் எஸ் எஸ் லலித்குமார் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லலித் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு அட்வான்ஸ் ஆக 25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் தற்பொழுது விஜய் சேதுபதி அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து வருவதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிக்க முழு மனதோடு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.