கதாநாயகியிடம் கணக்குப் பார்த்த தயாரிப்பாளர்..! வட்டியும் முதலுமாக கொடுக்க முன்வந்த பூஜா ஹெக்டே..!

pooja
pooja

தமிழ் திரையுலகில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹேக்டே இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான டீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் மாஸ் ஹீரோவாக நடித்துள்ள அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக மாபெரும் தோல்வியை சந்தித்தது என்பது உண்மை.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில் அதனை மீறி உள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே மீது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது அதாவது தளபதி விஜயுடன் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் பொழுது  பூஜாவுடன்  அவருடைய உதவியாளராக 10 முதல் 12 நபர்களை அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தனக்கு படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்கு  அனாவசியமாக செலவு செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் நிறுவனத்தில் இருந்து பூஜைவுக்கு  கண்டிஷன் போட்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது  அதையும் மீறி பூஜா ஹெக்டே தன்னுடைய உதவியாளர்களுக்கு பல்வேறு  செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்த செலவினை பூஜாவிடம் திரும்பி தருமாறு தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு தயாரிப்பு நிறுவனம் கூறியதை தொடர்ந்து பூஜாவும் தன்னுடைய அதிகபட்ச செலவு எவ்வளவு என்று கணக்கு போட்டு வையுங்கள் நான் கொடுத்து விடுகிறேன் என கூறிவிட்டாராம்.

இவ்வாறு போகிற போக்கை பார்த்தால் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எந்த ஒரு திரைப்படத்திலும் இனிமேல் பூஜா ஹெக்டே நடிக்க மாட்டார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.