தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட விலங்குகிறார்.
இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்து கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது எதற்காக என்றால் இவர் வாங்கிய கடனுக்காக ஈசிஆரில் உள்ள பங்களா ஒன்றை விற்க கூட நினைத்தாராம்.
அப்போதுதான் சிவகார்த்திகேயனின் கடனை அடைக்க லைக்கா நிறுவனம் முன் வந்தது. அதுமட்டுமல்லாமல் அப்போது ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டது அதாவது சிவகார்த்திகேயன் ஆண்டிற்கு ஒரு முறையாவது எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் கடன் தொல்லையில் இருந்து மீண்டு தற்போது சந்தோஷமாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படங்களில் லைக்கா நிறுவனமும் அவருடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும் உருவானது.
இதற்கு முன்னதாக நடிகர் விஷால் கடனை அடைக்க லைக்கா நிறுவனம் முன் வந்தது ஆனால் விஷால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் லைக்கா நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி கிடையாது லைக்கா நிறுவனம் செய்த உதவிக்காக அவர் வேற மாதிரி நன்றி கடனை செய்து வருகிறார்.