தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா எனத் தொடங்கும் இந்த பாடல் youtube இல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் மங்காத்தா திரைப்படத்தை தயாரித்த துறை தயாநிதி மீது நடிகர் அஜித்குமார் செம கோபத்தில் இருப்பதாக தற்போது ஊடகத்தில் ஒரு பிரபலம் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா.
இந்த திரைப்படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, மகத், பிரேம்ஜி, வைபவ், உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அஜித் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள பின்னணி இசையும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் மங்காத்தா திரைப்படத்தை துறை தயாநிதி அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் துறை தயாநிதி மங்காத்தா படத்தின் வெளியிட்டு உரிமையை தற்போது உள்ள நடிகர், அரசியல்வாதி, விநியோகஸ்தகர், தயாரிப்பாளர், என பிசியாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மங்காத்தா படத்தின் வெளியிட்டு உரிமையை கொடுத்திருக்கிறார்.
இந்த வெளியீட்டு உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிடம் கொடுத்துவிட்டாராம் இது தெரியாமல் இருந்து வந்த அஜித் மங்காத்தா படத்தை பார்க்கும்போது ஸ்டுடியோ ஸ்கிரீன் பெயர் வந்ததும் கோபமாகிவிட்டாராம். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் துறை தயாநிதியை அழைத்து இந்த படத்தை யாரை கேட்டு அவர்களிடம் ஒப்படைத்து உள்ளீர்கள் என்று அவரை திட்டி உள்ளாராம். இதை சினிமா பிரபலம் ஒருவர் ஒரு youtube சேனல் பேட்டியில் கூறியுள்ளார்.