தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவர் மீது பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளாரான தியாகராஜன் அவர்கள் சூர்யா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கை நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம்தான் தானாசேர்ந்தகூட்டம் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தை தெலுங்கு ரீமேக்கில் வெளியிட ஞானவேல் உரிமையை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்த திரைப்படத்தினை சில மாதங்களுக்கு முன்பாக தான் தெலுங்கில் டப் செய்து ஞானவேல்ராஜா அவர்கள் வெளியிட்டிருந்தார் இதனை எதிர்த்து தியாகராஜனும் அவருடைய மனைவியும் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏனெனில் இந்த திரைப்படமானது ஒப்பந்தத்திற்கு முரணானது ஆகையால் இத்திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட கூடாது என தடை விதித்து உள்ளார்கள்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்வது வேறு ரீமேக் செய்வது வேறு என்று தியாகராஜனுக்கு புரியவைத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இத் திரைப்படமானது ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்தவகையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை தியாகராஜன் இடம் இருந்தால் கூட இத்திரைப்படத்தை ஞானவேல் அவர்கள் டப்பிங் செய்யலாம்.
இவ்வாறு இதன் காரணமாக சூர்யா திரைப்படத்தின் மீது இருந்த வழக்கானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் ரிமேக் வேறு டப்பிங் வேறு என்பதை தியாகராஜனுக்கு நன்றாக உணர்த்தியுள்ளார்கள்.