Red Card : தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கூட்டத்தில் தனுஷ், அதர்வா, விஷால் மற்றும் சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பா சங்கம் திட்டமிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பிற்கு வராமல் ( மற்ற பாடங்களில் நடித்து வருவதால்) தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தனுஷுக்கு ரெக்கார்ட் வழங்க முடிவு செய்துள்ளது.
தயாரிப்பாளர் மதி அழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதே போல நடிகர் சிம்பு பலமுறை புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள் காட்டி ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு / செலவு வைக்காதது தொடர்பாக ரெட் கார்டு கொடுத்துள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு நடிகர்களுக்கும் ரெக்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது தற்பொழுது சோசியல் மீடியாவில் பூதாகரமாக விடுத்து உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் கட்டுப்பாடுகள் விதித்தால்தான் நடிகர்கள் ஒழுங்காக சினிமாவிற்கு வருவார்கள் கரெக்டாக முறைப்படி எல்லாம் நடக்கும் எந்த பிரச்னையும் வராது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.