கிடப்பில் போடப்பட்ட சூர்யாவின் படத்தை கையில் எடுத்த தயாரிப்பாளர்.! வெளியான தகவல்..

surya
surya

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு மீனவர் தோட்ரத்தில் காட்சி அளித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

பிதாமகன், நந்தா, திரைப்படங்களை இயக்கிய பாலா அவர்களின் கூட்டணியில் பல வருடங்கள் கழித்து சூர்யா அவர்கள் தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட பட பிடிப்பு தொடங்குவதற்கு முன் சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தை பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சில வதந்திகள் வெளியானது.

அது வெறும் வதந்தி தான் என கூறும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் ஒரு ட்விட்டர்  வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி செட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் சூர்யா இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் காது கேட்காமல் வாய் பேசாத கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து வணங்கான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்கள் கழித்து சூர்யா மற்றும் பாலா இணைய உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.