அஜித்தை வண்ட வண்டையாக திட்டி கண்ணீரில் மிதக்க வைத்த தயாரிப்பாளர்.! உண்மையை உடைத்த பிரபலம்..

ajith
ajith

நடிகர் அஜித் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை கடுமையாக திட்டி உள்ளாராம். இதனால் அதே இடத்தில் நடிகர் அஜித் கதறி கதறி அழுது உள்ளதாக சினிமா பிரபலம் ஒருவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினத்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

துணிவு திரைப்படத்தில்  நடிகர் அஜித்தின் கெட்டப்பை பார்த்து இதுவரைக்கும் இந்த மாதிரி கெட்டப்புல உங்கள பார்த்ததே இல்லையே தல என்று கூறி வருகிறார்கள் அப்படி ஒரு மிரட்டலான லுக்கில் நடித்துள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் ஏ கே 62 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படம் வெளியான உடனே நடிகர் அஜித்குமார் அடுத்த படத்தில் நடிக்க போவதால் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது நடிகர் அஜித்குமார் பல வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு காஜா மொய்தீன் அவர்கள் சென்று இருக்கிறார் அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை கடுமையாக திட்டியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த தயாரிப்பாளர் திட்டிய உடனே அங்கேயே அஜித் அவர்கள் கதறி அழுததாக காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் கூறி பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்