செல்வராகவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த “நானே வருவேன்” பட தயாரிப்பாளர் – இதோ புகைப்படம்..!

naane-varuven
naane-varuven

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்  செல்வராகவன். இதுவரை திரையுலகில் இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். அதிலும் குறிப்பாக சொல்வராகவனும், தனுஷும் கைகோர்த்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் தான் அந்த வரிசையில்  ஒரு படத்தை சேர்க்க..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷும், செல்வராகவனனும் கைகோர்த்து நானே வருவேன் படத்தில் இணைந்தனர்.  இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் கலைப்புலி தாணு அவர்கள் படத்தை தயாரித்திருந்தார். நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடன் கைகோர்த்து செல்வராகவன், யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த   படம் அதை பூர்த்தி செய்யவில்லை.. மேலும் கலவையான  விமர்சனத்தை பெற்றுள்ளது ஓடிக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த படத்தில் தனுஷ் நடிப்பு மிரட்டலாக இருந்தது என சொல்லி வருகின்றனர். நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனால் அடுத்தடுத்த நாட்களில்  நானே வருவேன் படத்தின் வசூல் குறையும் என பலரும் காணப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விமர்சனங்கள், வசூல் நான் எதையும் பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் தாணு அவர்கள் தற்பொழுது செல்வராகவனை சந்தித்து அவருக்கு பெரிய மாலை அணிவித்து அழகு பார்த்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

naane varuven
naane varuven