தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் தியாகராஜன். இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமாவில் இவருக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.
இந்த படம் 1983 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல முன்னணி நடிகை சரிதா அவர்கள் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த தியாகராஜன் நடிகராகமட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் தியாகராஜன் அவர்கள்.
இந்த நிலையில் திருப்பதியில் மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அந்த நேரத்தில் நடிகை சரிதா தன்னுடைய மொத்த சம்பளத்தையும் கொடுத்தால் தான் நான் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் என பலரும் கூறி சமாதானமே ஆகாமல் இருந்திருக்கிறார்.
இதனால் மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த படத்தின் தயாரிப்பாளர் வேறு வழி இல்லாமல் நடிகை சரிதாவிற்கு தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்து சம்பளமாக கொடுத்தாராம்.
இந்தப் படத்தின் பட்ஜெட் மிக குறைந்த அளவு தான் இருந்தது ஆனால் படம் வெளியான பிறகு தான் அனைவருக்கும் நடிகைகளுக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மற்றும் நடிகர்களுக்கும் சம்பளம் தருவதாக கூறியிருந்தாராம் ஆனால் சரிதா திடீர் என கேட்டதால் வேற வழி இல்லாமல் தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
இதை சினிமா பிரபலம் ஒருவர் கூறி ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் அந்தத் தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தது பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.