சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிரச்சினை பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே. புதுமுக நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ளது மேலும் இவ்வாறு புது முக நடிகர், நடிகைகள் அறிமுகமாகி இந்த அளவிற்கு வெற்றியை பெற்றுள்ள முதல் திரைப்படம் தான் லவ் டுடே.
கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார் மேலும் ஐந்து கோடி ரூபாய் செலவில் இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சினை பெற்றது.
இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரையிலும் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது மேலும் விரைவில் 100 கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு புதுமுக நடிகரான பிரதிப் ரங்கநாதன் தன்னுடைய அறிமுகப்படுத்திய இவ்வாறு முன்னணி நடிகர்கள் அளவிற்கு வசூல் சாதனையை பெற்றுள்ளார். இதன் காரணமாக பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் பிரபல முன்னணி நடிகர்களுக்கும் கதை சொல்லி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் விஜயை நேரில் சந்தித்து கதை சொன்னதாகவும் அது அவருக்கு பிடித்ததாகவும் சமூக பேட்டி ஒன்றில் கூறினார். இவரைத் தொடர்ந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் உங்க படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரதிப் ரங்கநாதன் ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது இதன் காரணமாக பிரதிப் ரங்கநாதனுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் பரிசு ஒன்றை வழங்கியுள்ளது அது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து பெரிதாக லாபத்தை பார்க்காமல் இருந்து வந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அந்நிறுவனத்திற்கு அமைந்துள்ளது. எனவே இயக்குனரும், நடிகருமான பிரதிப் ரங்கநாதனுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது அது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.