பிரபல நடிகர் ஒருவர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பஞ்சாயத்துக்கு போய் பஞ்சரான கதையை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். அதாவது பிரபல நடிகர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அனைத்துமே அவர்களுக்கு தோல்வி திரைப்படம் ஆக தான் அமைந்தது ஆனால் அந்த நடிகர் எப்படியாவது முன்னணி நடிகர்களுக்கான அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய புதிய படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் அந்த நடிகர் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது புது புது நடிகைகளை வைத்து தான் நடிகர் இதனால் அவருடைய மனைவி சந்தேகப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு அந்த நடிகருடன் தான் செல்வாராம். அப்படி அவரால் வர முடியவில்லை என்றால் அங்கு உள்ள துணை இயக்குனரை கையில் போட்டுக்கொண்டு அவரை வேவு பார்க்க வைத்துள்ளார்.
இப்படியே சில காலம் போன பின் திடீரென அவருடைய மனைவிக்கு ஒரு தகவல் போய் உள்ளது அதாவது தற்போது அந்த நடிகர் நடித்து வரும் படத்தில் சக நடிகை உடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக நடிகரின் மனைவியின் காதில் பொய் விழுந்தது. இதனால் அந்த நடிகரின் மீது சந்தேகப்பட்ட அவரது மனைவி அந்த நடிகரிடம் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சில குடும்பத்தின் தலைவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது அப்போது அவரைப் பற்றி ஆளுக்கு ஆள் அவரை பற்றி பேசியது பூகம்பமாக வெடித்தது. அதன் பிறகு அந்த நடிகர் அவருடைய மனைவியுடன் சரணடைந்தார். அதாவது நான் எதுவும் செய்யவில்லை என்னை நம்பு என்று அவர் கூறிய அந்த பிரச்சனையை அப்படியே சரி செய்து விட்டார்.ஆனால் அவருடைய மனைவி அந்த நடிகரின் மீது சந்தேகமாக தான் இருக்கிறாராம்.