ஜெய்பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து மாநாடு திரைப்படத்திற்கு வந்த சிக்கல்..! இங்கயும் அதே பிரச்சனைதானா..!

jai-bheem-manadu
jai-bheem-manadu

சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட திரைப்படம்தான் ஜெய் பீம் திரைப்படம்.இந்த திரைப்படமானது வெளியாகி ஒரு சமூகத்தினரை இழிவு படுத்திக் காட்டியதன் காரணமாக பல சிக்கல்களுக்கு ஆளாகி விட்டது.

இதனை தொடர்ந்து தற்போது மாநாடு திரைப்படத்திற்கும் புகை பிரச்சனை வந்துள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தை பேசப்பட்டு வருகிறது. பொதுவாக பல்வேறு பிரச்சனை மட்டும் இல்லாமல் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தவர்தான் நடிகர் சிம்பு.

இவருடைய திரைப்படம் முதன்முதலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு தான் வெளியிட இருந்தார்கள். ஆனால் சில பல பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியிடலாம் என படக்குழுவினர்கள் முடிவு செய்தார்கள்.

ஆனால் அதிலும் சான்றிதழ் பிரச்சனை காரணமாக திரைப்படம் வெளியிட முடியாது என பொதுப் பிரச்சினை உருவாகியது. அதன் பின்னர் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து திரைப்படமானது திரையரங்கில் வெளியிடப்பட்டது.

பொதுவாக சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஒரு நல்ல திரைப்படம் என்றால் அது மாநாடு திரைப்படம் தான். இந்த திரைப்படம் வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த திரைப்படமானது இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளதாக பாஜக கட்சி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் தெரிவித்துள்ளார்.ஆகையால் இந்த பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டுமென குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.