வலிமை படம் சந்தித்த சிக்கலை.. RRR திரைப்படமும் சந்தித்து விடுமோ.? அச்சத்தில் ரசிகர்கள்.

RRR vs VALIMAI
RRR vs VALIMAI

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வெற்றி கொண்டு வருபவர் எஸ். எஸ் ராஜமௌலி.  ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து இருந்தாலும் பிரபாஸை வைத்து பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாவது பாகத்தை எடுத்து இருந்தார் இந்த இரண்டு படங்களும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அதன் ராஜமௌலியின் சினிமா பயணமும் கிடுகிடுவென விண்ணைத் தொட்டது என்றுதான் கூறவேண்டும் இப்பொழுதும் இவர் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார். இவரது படத்தில் நடித்தால் மிகப்பெரிய உச்சத்தை எட்டலாம் என கணக்குப் போட்டு பல டாப் நடிகர், நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து RRR என்னும் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார். படம் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்தை வைத்து HD தரத்தில் படத்தை உருவாகி உள்ளது.

இந்த படம் ஒரு வழியாக வருகின்ற 25ஆம் தேதி கோலாகலமாக உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரம் 6  நிமிஷம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை போலவே அஜித்தின் வலிமை திரைப்படமும் சுமார் 3 மணி நேரம்.  படம் நீளமாக இருந்த காரணத்தினால்  ரசிகர்களை சற்றுக் சலிப்படைய  செய்தது.

இதனை எடுத்து வலிமை படக்குழு சில காட்சிகளை நீக்கி படத்தை விறுவிறுப்பாக கொண்டு வந்தது அதே நிலைமை RRR படத்திற்கு வரக்கூடாது என ரசிகர்கள் வேண்டிக் கொண்டு வருகின்றனர்.  வலிமை படமும், RRR படமும் வெவ்வேறு கதை களத்தை கொண்டு நகருகிறது. RRR படம் நீளமாக இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதே ஒரு பக்கத்து ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.