தமிழ் சினிமாவில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் சூர்யாவை வைத்து காக்க காக்க என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர்தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு என பிறமொழி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிம்புவை வைத்து மூன்று படங்களை இயக்கி மூன்று படங்களையும் வெற்றி கொண்டவர் இயக்குனர் கௌதம் மேனன். அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படங்களாக இந்த மூன்று திரைப்படங்களும் அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் கூட்டணியில் முதன் முறையாக உருவான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் கதாபாத்திரம் இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்களது கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிம்புவிற்கும் இயக்குனர் கௌதம் மேனனுக்கு இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் அவர் இயக்க இருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகமும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகுமா என்ற சிக்கல் இருந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தற்போது கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.