நாகை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயின் வீட்டில் இறந்த நிலையில் மனித முகம் தோற்றத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று இறந்த நிலையில் பிறந்திருக்கிறது. இந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பொதுவாக பல கிராமங்களில் இரு தலை ஆட்டுக்குட்டி எட்டு காலுடன் கன்று குட்டி இரண்டு குட்டியும் ஒற்றி பிறப்பது என்று விலங்குகளுக்கு வித்தியாசமான குட்டிகள் பிறந்துள்ளது.
பெரும்பாலும் ஒரு விலங்கு இனத்தில் மாறுபட்ட குட்டி ஒன்று பிறந்தால் அது இறந்து தான் பிறக்கிறது இப்படி ஒரு செயல் தான் நாகையில் நடந்திருக்கிறது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாமராமபுறம் இசிஆர் மெயின் ரோடு உப்பு குளத்தன் கிராம பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தினந்தோறும் கூலி பணியை செய்து வருகிறார்.
இந்த சுப்பிரமணி என்பவருக்கு கிட்டத்தட்ட பத்து ஆடுகள் மேல் வளர்த்து வருகிறார். சமயத்தில் அவர் வளத்த ஒரு ஆடு குட்டி போட்டு உள்ளது. பொதுவாக ஆட்டுக்குட்டி எப்படி இருக்கும் என்று நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அந்த ஆட்டுக்குட்டி மனித முகத்தோடு இறந்து பிறந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த ஆட்டுக்குட்டி மனித முகத்தோடு பிறந்து இருப்பதை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து அந்த ஆட்டுக்குட்டியை வீடியோ புகைபடம் எடுத்து உள்ளனர். தற்போது அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டியின் புகைப்படம்.